உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மின்வாரியம் சார்பில், கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் வரும் 1ம் தேதி துவங்கி நடக்கிறது.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அந்தந்த கோட்ட அலுவலகங்களில் செவ்வாய் கிழமைகளில் நடக்கிறது. ஜூலை 1ம் தேதி விழுப்புரம் செற்பொறியாளர் அலுவலகத்திலும், 8ம் தேதி கண்டமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகம், 15ம் தேதி செஞ்சி செயற்பொறியாளர் அலுவலகம், 22ம் தேதி திண்டிவனம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24ம் தேதி திருவெண்ணைநல்லுார் செயற்பொறியாளர் அலுவலகம், மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர்கள் பொது மக்கள் கலந்துகொண்டு, மின்துறை தொடர்பான தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை