உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சமத்துவ நாள் உறுதிமொழி

 சமத்துவ நாள் உறுதிமொழி

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர். ஜாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களின் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டி, அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த, அம்பேத்கரின் பிறந்த நாளில், ஜாதி வேறுபாடுகளின்றி சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் பாடுபடுவோம் என்று உறுதியேற்றனர். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லுார்துசாமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ