பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.9.60 லட்சத்தில் உபகரணங்கள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ரூ.9.60 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்புக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நடந்த நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் தலைமை தாங்கினார். பட்டு வளர்ச்சி மத்திய பகுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.60,000 வீதம் 14 பட்டுபுழு வளர்ப்பு விவாசாயிகளுக்கு, ரூ 8.40 லட்சம் மதிப்பீட்டில், பட்டு புழு வளர்ப்புக்கான தளவாடங்கள் மற்றும் விவசாய உழு கருவிகள், கிருமி நாசினிகளை கலெக்டர் வழங்கினார். மாநில திட்டத்தின் கீழ் பட்டுபுழு வளர்ப்பு மனை அமைப்பதற்காக, ஒரு விவசாயிக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மானியத்தொகை என மொத்தம் 15 விவசாயிகளுக்கு ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் வெங்கடேஸ்வரன், பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் இளையராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.