உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார்; உளுந்துார்பேட்டை அருகே விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த ஆவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள் ரமேஷ், 25; விவசாயி. இவர், நேற்று அதிகாலை அதே பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருநாவலுார் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை