உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

மயிலம்: மயிலத்தில் விவசாயிகள் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.மயிலம் மலை அடிவாரத்தில் நடந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர்கள் தினேஷ், அய்யனார் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் ஜோதி முருகன் வரவேற்றார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் உலகநாதன் பேசினர்.நிர்வாகிகள் பழனி, சதாசிவம், சண்முகம், உமாபதி, வேணுகோபால் ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காட்டு பன்றியால் ஏற்படும் இழப்பீட்டிற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கிராமங்கள் தோறும் விவசாயிகள் சங்க கொடியை ஏற்ற வேண்டும்.நெல், கரும்பிற்கு உரிய ஆதார விலையை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மயிலம் ஒன்றிய நிர்வாகி வீரப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை