விவசாயிகள் குறைதீர் கூட்டம்..
விழுப்புரம்; விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 9 ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் இந்த கூட்டம் நடக்கவுள்ளது. இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் வட்டங்களுக்கு உட்பட்ட விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.