உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் பங்கேற்கும் விழா மேடை பணி: கலெக்டர் ஆய்வு

முதல்வர் பங்கேற்கும் விழா மேடை பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்திற்கு, முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த எல்லீஸ்சத்திரம் புதிய அணைக்கட்டு, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மண்டப திறப்பு விழா இம்மாதம் இறுதியில் நடக்கிறது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்க உள்ளார்.நினைவு மண்டபத்தின் அருகே உள்ள காலி இடத்தில் விழா மேடை அமைப்பதற்கான இடத்தை, கலெக்டர் பழனி நேற்று மாலை பார்வையிட்டார். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் செல்வகுமார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை