குப்பை கிடங்கில் தீ
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி குப்பை கிடங்கு தீ பிடித்து எரிந்தது. திண்டிவனம் - சலாவதி ரோட்டில் நகராட்சி குப்பை கிடங்கில் நகர் முழுதும் சேமிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்கப்படுகிறது. இதில் மக்கா குப்பைகளை, அங்குள்ள குடோனில் மலை போல் குவித்து வைத்திருந்தனர். இந்த குப்பை கிடங்கில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் தீ பிடித்து எரிந்து, அந்தப்பகுதி முழுதும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த திண்டினம் தீயணைப்பு நிலைய அதிகாரி மாரிசெல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போாரடி தீயை அணைத்தனர். மர்ம ஆசாமிகள் தீ வைத்திருக்கலாம் என தியணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.