உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தியாகிக்கு மலர் அஞ்சலி

தியாகிக்கு மலர் அஞ்சலி

திண்டிவனம் : திண்டிவனம் வட்ட தமிழ்நாடு மருத்துவ நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், சுதந்திர பேராாட்ட தியாகி வைரப்பன் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ், தியாகி வைரப்பன் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். சங்க மாநில இணை பொது செயலாளர் சிவக்குமார், திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராம் டெக்ஸ் வெங்கடேசன், தமிழ்நாடு சிறு விவசாயிகள் சங்க முன்னேற்ற சங்க தலைவர் மணி, சங்க நிர்வாகிகள் நடராஜன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை