உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி அமைச்சர் தொடர்ந்த வழக்கு; அரசியல் விமர்சகர் கோர்ட்டில் ஆஜர்

மாஜி அமைச்சர் தொடர்ந்த வழக்கு; அரசியல் விமர்சகர் கோர்ட்டில் ஆஜர்

திண்டிவனம்,; மாஜி அமைச்சர் தொடர்ந்த வழக்கில், அரசியல் விமர்சகர் நேற்று திண்டிவனம் கோர்ட்டில் ஆஜரானார்.திண்டிவனத்தை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி ரோஷணை போலீசில், ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக தன் மீது அவதுாறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கடந்த ஜூலை 11ல் திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கமலா முன் ஆஜரான முன்னாள் அமைச்சர் சண்முகம், ரவீந்திரன்துரைசாமி, கவுதமன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக கொடுத்தார். அதையடுத்து, மாஜி அமைச்சரின் புகார் ஏற்கப்பட்டதாக கடந்த 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் ஆகியோருக்கு கோர்ட் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது.ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்ற ரவீந்திரன் துரைசாமி, நேற்று திண்டிவனம் முதலாவது மாஜிஸ்திரேட் கமலா முன் நேற்று ஆஜரானார். தினசரி காலை 10:30 மணிக்கு ரோஷணை போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரவீந்திரன் துரைசாமிக்கு ஜாமின் வழங்கி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
நவ 07, 2024 14:58

பிராமணர்களை பற்றியும் நிறையபேர் தினசரி அவதூறு கருத்துக்கள் பரப்பிட்டுதான் வராங்க. அவங்க யார் பேருலயும் இந்த மாதிரி வழக்கு பதிவு செஞ்சதா பாக்கவே முடியலையே? பிராமணர்களுக்கு சட்டம் தெரியலயா இல்ல சொரணை இல்லையா? சங்கம் வச்சுருக்காங்க அதுல சட்டப்பிரிவுன்னு ஒன்னும் இல்லையோ?


rama adhavan
நவ 07, 2024 19:54

இது தனிப்பட்ட வழக்கு. நீங்கள் சொல்வது பொதுவான பிரட்சினை. தனி நபர் போட முடியாது. இந்த அரசு ஆதரவு ஆட்கள் வேண்டாதவர்கள் மீது 200 புகார் பல்வேறு காவல் நிலையகளில் போட்டு உடன் பிணை எடுக்க முடியாத செக்ஷன்kalilஎப் ஐ ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். நீதிமன்றமும் அர்ரெஸ்ட் செய்யும். அதுபோல் 1000 மனுக்கள் பல்வேறுபோலீஸ் ஸ்டேஷங்கள் தந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஐகோர்ட்ஐ நாடலாம். இதுதான் ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை