மேலும் செய்திகள்
மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்
13-Sep-2024
திண்டிவனம்: வெள்ளிமேடுபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சுப்பராயன் தலைமை தாங்கினார். ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், 122 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராமையா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், அன்பரசி, தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் ேஹமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
13-Sep-2024