உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணம்

ரங்கநாதர் கோவிலில் இலவச திருமணம்

செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கான இலவச திருமண திட்டத்தில் சேரானுார் கிராமத்தை சேர்ந்த சரவணன், சரண்யா ஆகியோருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரசு சார்பில் 4 கிராம் தங்க தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை