உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஜயோக தியான நிலையத்தில் இன்று இலவச தியான முகாம்

ராஜயோக தியான நிலையத்தில் இன்று இலவச தியான முகாம்

விழுப்புரம்: வளவனுாரில் பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் இன்று 22ம் தேதி இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் தினமும் தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 22ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச சிறப்பு தியான முகாம் நடக்கிறது.முகாமில் உலக பிரசித்தி பெற்ற ராஜயோக தியான பயிற்சி, வாழும் கலை மன அழுத்தத்திலிருந்து விடுதலை, தற்கொலையிலிருந்து விடுவித்தல், ஆத்மா, பரமாத்மா குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். இத்தகவலை பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை