இலவச தையல் பயிற்சி முகாம்
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரத்தில் தமிழ்நாடு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தின் சார்பில், இலவச தையல் பயிற்சி முகாம் துவங்கியது.பாரதி சமுதாயக் கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, சமூக நல அலுவலர் ராஜாம்பாள் தலைமை தாங்கினார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் முகாமின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, 3 மாதங்கள் நடைபெறும் இம்முகாமில் மாவட்டம் முழுவதிலுமிருந்து 106 பெண்கள் பயனடைய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பாரதி சமுதாய கல்லுாரி தாளாளர் பாரதி செய்தார்.