மயிலத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
மயிலம்: மயிலத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அக்னி குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியன்று, விநாயகர் சிலையை கீழ்மயிலம், மலை அடிவாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் வழிபட்டனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு விநாயகர் சிலைகளின் விஜர்சன ஊர்வலம் நடந்தது. அப்போது வீடுகளில் வைத்து வணங்கிய சிறிய சிலைகளையும் சேகரித்தனர். தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு விநாயகர் சிலைகளுக்கு குளக்கரையில் தீபாராதனை செய்து சிலைகள் விஜர்சனம் செய்தனர்.