விழுப்புரத்தில் கோல்டன் மார்பிள்ஸ் டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா
விழுப்புரம்: விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் அருகே இயங்கி வந்த கோல்டன் மார்பில்ஸ் டைல்ஸ் ஷோரூம் இடம் மாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு கம்பன் நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த திறப்பு விழாவிற்கு ஆளவந்தார் மோட்டார் கடை உரிமையாளர் நந்தகோபால் தலைமை வகித்தார். ரமணிபாய் நந்தகோபால் முன்னிலை வகித்தார். கோல்டன் மார்பிள்ஸ் உரிமையாளர் பிரேம்நாத், சந்தானலட்சுமி பிரேம்நாத், மோகித்ராம் ஆகியோர் வரவேற்றனர்.வனத்துறை அமைச்சர் பொன்முடி , கோல்டன் மார்பிள்ஸ் ஷோருமை திறந்து வைத்தார். விசாலாட்சி பொன்முடி குத்துவிளக்கேற்றினார். விழாவில், ., எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், அ.தி.மு.க., நகர செயலர் பசுபதி, மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர்கள் பிரகாஷ், வெங்கடேஷ், ராஜேஷ், கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் குணசேகரன்.வி.ஆர்.பி., பள்ளி தாளாளர் சோழன், ஏ.வி.எஸ்., சந்துரு, தொழிலதிபர் பழனி, டாக்டர்கள் ராமச்சந்திரன், ராஜ்குமார், பஷீர், சுப்பிரமணியன், கோபி, வக்கீல்கள் நாகராஜன், தன்ராஜன், சேம்பர் ஆப் காமர்ஸ் ராமகிருஷணன், முபாரக் அலி, கமருதின், பாலகுரு, பலராமன், கவுன்சிலர் மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.