உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலை அறிவியல் கல்லுாரி 52வது ஆண்டு பட்டமளிப்பு விழா

அரசு கலை அறிவியல் கல்லுாரி 52வது ஆண்டு பட்டமளிப்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில், கடந்த 2021-22ம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான, 52ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், சென்னை மாநில கல்லுாரி முன்னாள் முதல்வர் முகமது இப்ராகிம், கடந்த 2021-22ம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இளநிலை கலை பாட பிரிவில் 415 மாணவர்களும், அறிவியல பாட பிரிவில் 504 மாணவர்களும், வணிகவியல் பிரிவில் 164 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முதுநிலை கலை பாட பிரிவில் 61 மாணவர்களும், அறிவியல் பாட பிரிவில் 124 மாணவர்களும், வணிகவியல் பிரிவில் 30 மாணவர்கள் பட்டம் பெற்றனர். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை