மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி அலுவலர் ஆர்ப்பாட்டம்
03-Apr-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பெரம்பலுார் மாவட்ட கலெக்டரை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் 31ம் தேதி, பெரம்பலுார் மாவட்ட கலெக்டரிடம் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தபோது அவர்களை கலெக்டர் அவமதித்ததை கண்டித்து, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தணிக்கையாளர் புகழேந்தி, வட்டார தலைவர் வீரம்மாள், துணை தலைவர் ஏழுமலை, பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், துரை, சேகர், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Apr-2025