பட்டதாரி ஆசிரியர் கூட்டணி கல்வி கொள்கைக்கு ஆதரவு
விழுப்புரம் : மாநில கல்வி கொள்கையை, பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி வரவேற்றுள்ளது. தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் செல்லையா அறிக்கை: தமிழக அரசு வெளியிட்டுள்ள கல்வி கொள்கையில், 3, 5, 8 மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுதேர்வு ரத்து, 1 முதல் 8 ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் தொலைநோக்கு திட்டம், மதிப்பீட்டு சீர்திருத்தங்கள், ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாடு, பாதுகாப்பான உள்ளடங்கிய பள்ளிகள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கல்வி மற்றும் சமூக நீதி கல்வி வழங்கப்படும் என்கிற மாநில அரசின் கல்விக் கொள்கையை முழுமையாக வரவேற்கிறோம்.