உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அனைத்து ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினத்தில் ஊராட்சி தலைவர்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல். 2023-24ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. துாய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.எனவே, பொதுமக்கள் அனைவரும், நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை