காரில் குட்கா கடத்தல்; 2 பேர் எஸ்கேப்
திண்டிவனம்; திண்டிவனம் அருகே காரில் கடத்தி சென்ற 85 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த தீவனுார் கூட்ரோடு பகுதியில் டி.எஸ்.பி பிரகாஷ் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும், இறங்கி தப்பியோடினர். போலீசார் காரை சோதனை செய்தபோது, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 85 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.