உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை

வீடு புகுந்து நகை திருட்டு; போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் முனியம்மாள், 45; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அதே தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் தூங்கினார். அதிகாலை சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை