உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை பயிற்சி

காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு தோட்ட கலைத்துறை பயிற்சி

விழுப்புரம்; கோலியனுார் வட்டார தோட்ட கலைத்துறை சார்பில் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சந்தைபடுத்துதல், பதப்படுத்துதல், ஏற்றுமதி குறித்து பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கினார். கோலியனுார் வட்டார உதவி இயக்குநர் வெங்கடேசன் வரவேற்றார். தமிழக உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மூத்த மேலாளர் ஜெயப்பிரியா, காய்கறிகளில் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து பேசினார். வேளாண் உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன், காய்கறி உற்பத்தியில் ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் பயன்பாடுகளை தவிர்த்து இயற்கை முறையில் உற்பத்தி செய்வது மற்றும் சாகுபடி செய்ய மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுகன், உழவர் சந்தை வேளாண் அலுவலர் அருண், தனியார் நிறுவன மேலாளர்கள் மற்றும் உள்ளூர் மொத்த வியாபாரிகள் பங்கேற்றனர். தோட்டக்கலை அலுவலர் சந்திரலேகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ