மேலும் செய்திகள்
பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
14-Feb-2026
விழுப்புரம்: விழுப்புரத்தில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி மற்றும் மத்திய மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் தாகீர் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் முகமது அலி வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., இப்தார் நோன்பை துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் வெற்றிவேல், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, காங்., மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன். மத்திய மாவட்ட காங்., தலைவர் சிவா, தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன், முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் அப்துல்கனி. இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் பாபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் தமீன் நன்றி கூறினார்.
14-Feb-2026