உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

முகுந்தனுக்கு முக்கியத்துவம்: பா.ம.க.,வில் திடீர் திருப்பம்

பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11 ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு, நடக்க உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடக்க உள்ளதால், லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி அதிக வாகனங்களில் வர அறிவுறுத்தினார்.இந்த சூழ்நிலையில் கட்சி நிறுவனரான ராமதாஸ், அன்புமணிக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக, அன்புமணியிடமிருந்த மாநில தலைவர் பதவியை பறித்துவிட்டு, செயல்தலைவராக நியமிக்கப்பட்டார். ராமதாஸ் அறிவிப்பு, கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலுக்கு ராமதாஸ், தன்னுடைய பேரன் முகுந்தனை, மாநில இளைஞர் சங்க தலைவராக நியமித்ததுதான் காரணம் கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதனால் கட்சியில் பட்டும் படாமல் முகுந்தன் இருந்து வந்தார்.தற்போது மாமல்லபுரம் மாநாட்டிற்கு முகுந்தனை கட்சி நிர்வாகிகள் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு அடுத்து முகுந்தன் பெயர் சுவர் விளம்பரங்களில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. சில இடங்களில் ராமதாஸ், காடுவெட்டி குருவிற்கு அடுத்ததாக அன்புமணி பெயரில்லாமல் முகுந்தன் மாநாட்டிற்கு அழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மாநாட்டில் முகுந்தன் பெயர் முன்னிலைப்படுத்தி வருவது, பா.ம.க.,வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 15, 2025 10:14

மாங்காய்களின் நாடகம் அருமை. குடும்பத்தையே கட்சியாக்க துடிக்கிறார்கள். பாவம் இவர்களை நம்பி வந்து தங்கள் வாழ்க்கையை இழக்கும் ஏழைகள்.


சமீபத்திய செய்தி