அறநிலைய துறை அலுவலகம் திறப்பு விழா
வானுார் : வானுாரில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.வானுாரில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து வானுாரில் உள்ள அலுவலக கட்டடத்தில், சக்கரபாணி எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.மாவட்ட அறங்காவலர் குழு குப்பன், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் மைதிலி ராஜேந்திரன், வானுார் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன், வரதராஜ பெருமாள் கோவில் அறங்காவலர் கோவிந்தசாமி, கொழுந்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் கல்பனா பெருமாள், வி.புதுப்பாக்கம் சந்திரசேகர் கோவில் அறங்காவலர் வாசு, ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.