உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் திண்டிவனத்தில் ரூ. 5.56 கோடியில் துவக்கம்

ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் திண்டிவனத்தில் ரூ. 5.56 கோடியில் துவக்கம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் ரூ.5.56 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பணி துவக்க விழா நடந்தது. திண்டிவனம் சந்தைமேடு பதிவு அலுவலகம் அருகில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5.56 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள, ஒருங்கிணைந்த சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயபாலன், உதவி செயற்பொறியாளர் கற்பகம், மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய சேர்மன்கள் சொக்கலிங்கம், தயாளன், துணை சேர்மன்கள் ராஜாராம், பழனி, திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, வழக்கறிஞர் அசோகன், அயலக அணி முஸ்தபா, கவுன்சிலர்கள் சத்தீஷ், ஷபியுல்லா, பிர்லாசெல்வம், பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை