உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நிறைவு

தெய்வானை மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நிறைவு

விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி நிர்வாகம் மற்றும் எழுத்தாளர் க.ப.அறவாணனின் அனைத்திந்திய ஆராய்ச்சி கழகம் சார்பில் 19ம் பன்னாட்டு கருத்தரங்கம் நிறைவு விழா நடந்தது.விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். இ.எஸ்., கல்விக்குழுமங்களின் தாளாளர் சாமிக்கண்ணு, நிர்வாக தலைவர் செந்தில்குமார், சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை ஏழிசை இசை ஆய்வக இயக்குநர் கலைவாணி, சிறந்த கட்டுரைகளை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, சிங்காரவேலர் அறக்கட்டளை அறங்காவலர் வீரமணி, மயிலம் தமிழ் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் லட்சாராமன் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், ஆட்சிக்குழுவின் தமிழ்துறை பேராசிரியர் தாயம்மாள் அறிவாணன் பேசினார். பின், மகளிர் கல்லுாரி தாளாளர், நிர்வாக தலைவரிடம் க.ப., அறவாணனின் படைப்புகளை வழங்கினார்.இதில், ஆட்சிக்குழுவை சேர்ந்த ரத்தின வேங்கடேசன், நியூசிலாந்து மொழி பயிற்றுநர் இலக்குவன் சொக்கலிங்கம், கோயம்புத்துார் பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் சித்ரா, மோகனுார் சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லுாரி தாளாளர் பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆட்சிக்குழு தலைவர் தமிழ்வேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை