மேலும் செய்திகள்
தார் சாலை பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
15-Jun-2025
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றியத்தில் தொகுப்பு வீடுகளை புனரமைப்பதற்கான பணி ஆணையை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ஜெய்சங்கர் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.மஸ்தான் எம்.எல்.ஏ., கோவில்புரையூர், மேல்அருங்குணம், வளத்தி, வடபாலை, மேல்வைலாமூர், நொச்சலுார் உள்ளிட்ட 22 ஊராட்சிகளை சேர்ந்த 131 பயனாளிகளுக்கு 3 கோடியே 14 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் புனரமைக்கவும், 13 பயனாளிகளுக்கு 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்காகவும் பணி ஆணைகளை வழங்கினார்.மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள். ஊராட்சி தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
15-Jun-2025