உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டெய்னர் லாரி மோதி ஐ.டி ஊழியர் பரிதாப பலி

கண்டெய்னர் லாரி மோதி ஐ.டி ஊழியர் பரிதாப பலி

விக்கிரவாண்டி : கெடார் அருகே கண்டெய்னர் லாரி மோதி, ஐ.டி., ஊழியர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே ஒதியத்துரை சேர்ந்தவர் தீனதயாளன், 27; சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை சென்னையில் இருந்து பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தார். அதனூர் கூட்ரோடு அருகே வந்தபோது, முன்னால் சென்ற மற்றொரு பைக் மீது உராசியதால் நிலை தடுமாறி தீனதயாளன் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி தீனதயாளன் மீது ஏறியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை