உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் ஆனந்தன், தொழிற்சங்க தலைவர் அனந்தன், விவசாய அணி தலைவர் செந்தில், ஊடக அணி தலைவர் புவனேஷ்வரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பாலு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், பீகாரை பின்பற்றி தமிழகத்தில் மது ஒழிப்பை அமல்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். வீடூர் அணையை தூர்வார வேண்டும், விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும், விழுப்புரத்தில் சிப்காட் அமைக்க வேண்டும், திண்டிவனத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பஸ் நிலைய பகுதியல் மேம்பாலம் அமைக்க வேண்டும், மயிலம் தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட பொறுப்பாளர் கார்த்தி, சிறுபான்மையினர் அணி தலைவர் இம்ரான், ஒன்றிய தலைவர்கள் வானூர் நித்திஷ்குமார், காணை ஆதவன், விழுப்புரம் நகர தலைவர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ