மேலும் செய்திகள்
மரக்காணம் கலவர வழக்கு; பா.ம.க.,வினர் விடுதலை
29-Mar-2025
மாடு மீது பைக் மோதி வாலிபர் பலி
10-Mar-2025
விழுப்புரம் : மரக்காணத்தில் அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற காரைக்கால் வாலிபர் இறந்தார்.காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி மகன் தினேஷ், 21; ராஜா மகன் ராகவன், 21; நண்பர்கள். இருவரும் நேற்று காலை 10:00 மணிக்கு யமகா பைக்கில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்றனர். பைக்கை ராகவன் ஓட்டினார்.மரக்காணம் தீர்த்தவாரி சந்திப்பு அருகே எதிரில் வந்த அரசு விரைவு பஸ், பைக் மீது மோதியது.இந்த விபத்தில் படுகாயமடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராகவன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
29-Mar-2025
10-Mar-2025