மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
04-Oct-2025
செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருந்து பெண்கள் அம்மன் கோவில்களில் நோன்பு வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் கேதார கவுரி வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
04-Oct-2025