மேலும் செய்திகள்
விவசாயிகள் குறை தீர் கூட்டம்
21-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரம் கோட்ட அளவில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கிறது.மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு :விழுப்புரம் கோட்ட அளவில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வரும் 26ம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்க வுள்ளது. விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் வட்டங்களுக்கு உட்பட்ட விவசாய பிரதிநிதிகள் பங்கேற்கலாம்.
21-Dec-2024