மேலும் செய்திகள்
மதுரைவீரன் கோவிலில் திருவிளக்கு பூஜை
17-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில், 59ம் ஆண்டு சித்ரா பவுர்ணமியொட்டி விளக்கு பூஜை நடந்தது. விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன் கோவிலில், 59வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, கடந்த 8 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம், நேற்று முன்தினம் மாலை கலச ஸ்தாபனம், விளக்கு பூஜை நடந்தது. இதில், பெண் பக்தர்கள் விளக்கேற்றி பூஜை செய்து சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வேலவன் செய்திருந்தார்.
17-Apr-2025