அரசு மருத்துவக் கல்லுாரியில் நுாலகம்; முதல்வர் காணொலி மூலம் திறப்பு
விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதிய நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொது நுாலக இயக்கம் சார்பில் தமிழகம் முழுதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், மருத்துவமனைகளில் 70 புதிய நுாலகங்கள் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நுாலகம் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி நுாலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பேசியதாவது; இந்த நுாலகத்தில் 500க்கும் மேற்பட்ட பொது அறிவு மற்றும் மருத்துவ புத்தகங்கள் உள்ளன. மருத்துவமனை சிகிச்சைக்கு வருகின்ற பொதுமக்கள் அமர்ந்து படிக்க நாற்காலிகள், புத்தகம் வைக்கும் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன் என கூறினார்.நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (பயிற்சி ) வெங்கடேஷ்வரன், கல்லுாரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கேடசன், மாவட்ட நுாலக அலுவலர் முகமது காசீம், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட மைய நுாலகர் இளஞ்செழியன், நுாலகர் வேல்முருகன், பொதுப்பணித்துறை விஜய் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.