எல்.ஐ.சி., முகவர்்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். செயலாளர் அப்பாஸ்மந்திரி, பொருளாளர் சதீஷ், துணை செயலர்கள் ராமு, கோதண்டபாணி, சேகர், மோகன்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.எல்.ஐ.சி., பாலிசிக்கான பிரிமியம் தொகை உயர்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், முகவர்களுக்கான கமிஷன் குறைப்பை திரும்பப்பெற வேண்டும், காப்பீட்டுக்கான குறைந்த பட்ச தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.