உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டியலின ஊழியரை அவமதித்தவர்களை கைது செய்ய மா.கம்யூ., வலியுறுத்தல்

பட்டியலின ஊழியரை அவமதித்தவர்களை கைது செய்ய மா.கம்யூ., வலியுறுத்தல்

விழுப்புரம், செப். 14-திண்டிவனத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் குமார், முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணராஜ், வீரமணி ஆகியோர், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது: திண்டிவனம் நகராட்சி அலுவலக இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகிறார். கடந்த ஆக., 28ம் தேதி, 20 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரம்யா ராஜா, நகராட்சி அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று, தனது வார்டு திட்டப்பணி குறித்த ஒரு கோப்பினை எடுத்து வர சொன்னார். முனியப்பன் கோப்பினை தேடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கவுன்சிலர் ரம்யா ராஜா, முனியப்பனை திட்டினார். அதன் பிறகு நகராட்சி கமிஷனர் அறைக்கு முனியப்பனை அழைத்து, நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் மற்றும் ரம்யாவின் கணவர் ராஜா உள்ளிட்டோர், திட்டி, ரம்யாவின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இச்சம்பவத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யாமல் காலம் கடத்துவது நியாயமல்ல. எனவே, உடனடியாக குற்றவாளி களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை