உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வானுார், : கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., தைலாபுரம் கிளை சார்பில், வானுார் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தைலாபுரம் கிராமத்தில் குடிநீர் கலப்படம் இல்லாமல் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு சுடுகாடு பாதை அமைத்து தர வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., தைலாபுரம் கிளை சார்பில் நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் நடந்தது.கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு முத்துக்குமரன், மாவட்ட குழு அர்ஜூனன், முருகன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி