மேலும் செய்திகள்
ஏரியை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
06-Oct-2025
திருவெண்ணெய்நல்லுார்; சாத்தனுார் அணையிலிருந்து வரக்கூடிய தண்ணீரை மலட்டாறு வழியாக செல்லாதபடி தடுத்து நிறுத்தியதால் திருவெண்ணெய்நல்லுார் விவசாய நிலப் பகுதியில் தண்ணீர் புகுந்த தில் 70 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் மூழ்கியது. திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையிலிருந்து சில தினங்களுக்கு முன் திறந்து விடப்பட்ட தண்ணீர் திருக்கோவிலுார் அணைக்கட்டு வந்தடைந்து அங்கி ருந்து பிரிந்து ராகவன் வாய்க்கால் வழியாக ஏரிகளுக்கும், தென்பெண்ணை ஆறு வழியாக சென்று கடலில் கலப்பது வழக்கம். இந்நிலையில் திருவெண் ணெய்நல்லுார் அடுத்த பையூர் பெண்ணையாற்றில் இருந்து பிரிந்து செல்லும் மலட்டாறின் குறுக்கே தரைப்பாலத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரை அவ்வழியாக செல்லாதபடி அதிகாரிகள் மண்ணை கொட்டி தடுப்பு ஏற்படுத்தினர். இதன் காரணமாக அணையிலிருந்து வரக்கூடிய தண்ணீர் முழுதுமே ராகவன் வாய்க்காலில் சென்று திருவெண்ணெய்நல்லுார் ஏரி நிரம்பி கோடி போவதோடு ஏரியின் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடவு செய்துள்ள பயிர்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் 70 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு தண்ணீரில் மூழ்கி பாதியளவு அழுகிய நிலையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல வழியில்லாமல் ஏரி வாய்க்கால் தண்ணீரில் இறங்கி ஆபத்தான நிலையில் நிலங்களை சுற்றி பார்ப்ப தற்காக சென்று வருகின்றனர். ஏரிக்கு வரக்கூடிய தண்ணீரை திசை திருப்பி பாதியளவு தண்ணீரை மலட்டாறு வழியாக திறந்து விட வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Oct-2025