உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேன்ஹோல் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

மேன்ஹோல் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம், : விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் பகுதி சீரமைக்காததால் விபத்துகள் ஏற்படுகிறது.விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, மேன்ஹோல் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகும் நிலையில், பல இடங்களில் ஆளிறங்கு குழிகள் தாழ்வான பள்ளங்களாக தொடர்வதால், விபத்துகள் ஏற்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் விழும் நிலை தொடர்கிறது.மாம்பழப்பட்டு சாலை - காமதேனு நகர் சாலையிலும் சீர்படுத்தாமல் உள்ளதால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விழுந்து வருகின்றனர். அதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி