உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் தொகுதி தி.மு.க., பயிற்சி கூட்டம்

மயிலம் தொகுதி தி.மு.க., பயிற்சி கூட்டம்

மயிலம் : மயிலம் தொகுதி தி.மு.க., ஓட்டுச் சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் தீவனூரில் நடந்தது. தொகுதியில் பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பயிற்சி கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தொகுதி மேற்பார்வையாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் வரவேற்றார். மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா, மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், ஒலக்கூர் துணை சேர்மன் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் விஜயன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நெடி சுப்பரமணி, தொ.மு.ச., நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய விவசாய அணி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் சேகர், கண்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வகுமார், சங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன், கிஷோர், ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் செந்தில் கிளை செயலாளர் பிரபு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !