உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் செவிலியர் கல்லுாரி 6ம் ஆண்டு துவக்க விழா

மயிலம் செவிலியர் கல்லுாரி 6ம் ஆண்டு துவக்க விழா

விழுப்புரம்: மயிலம் செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், துணை செவிலியர் படிப்பு (ஏ.என்.எம்.,) சுகாதார ஆய்வாளர் (ெஹல்த் இன்ஸ்பெக்டர்) ஆகிய பிரிவுகளில் 6ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.மயிலம், சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், அறங்காவல் உறுப்பினர் நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார்.மயிலம் கல்விக்குழுமம் இயக்குனர் செந்தில், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லுாரி டீன் ரமாதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் முதல்வர் பாலகிருஷ்ணன் உட்பட கல்விக்குழுமம் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், புதிய அறிமுக மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ