உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் இயந்திரவியல் கருத்தரங்கு

வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் இயந்திரவியல் கருத்தரங்கு

விழுப்புரம், : விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இயந்திரவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன், துறை தலைவர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். மாணவர் முத்துக்குமார் வரவேற்றார். சென்னை, ஆர்.கே., குளோபல் கன்சல்டன்ட்ஸ் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், மாணவர்கள் சிறப்பாக இருக்க கல்லுாரியில் பயிலும் போதே இயந்திரவியல் படிப்போடு கூடிய தொழில்நுட்ப அறிவு மற்றும் கூடுதல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என பேசினார்.தொடர்ந்து பல மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள சமர்பிக்கப்பட்டது. விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் ஞானமூர்த்தி நடுவராக இருந்து சிறந்த 3 ஆய்வு கட்டுரைகளை தேர்வு செய்தார்.சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கும், பல்வேறு தொழில்நுட்ப போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர் அய்யனார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ