உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டவுன் பஸ் சேவை நீட்டிப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

டவுன் பஸ் சேவை நீட்டிப்பு எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

செஞ்சி: செஞ்சியில் இருந்து வேட்டைக்காரன் குடிசை கிராமத்திற்கு டவுன் பஸ் சேவை துவங்கியது. செஞ்சி அடுத்த வேட்டைக்காரன் குடிசை கிராம மக்கள் பஸ் வசதியின்றி 2 கி.மீ., துாரம் நடந்து வந்து பஸ் ஏறிச் செல்லும் நிலை இருந்தது. இதனால், பஸ் வசதி கேட்டு முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து நேற்று செஞ்சியில் இருந்து வெள்ளிமேடுபேட்டை செல்லும் டவுன் பஸ் வேட்டைகாரன் குடிசை கிராமத்திற்கு செல்லும் வகையில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக் தொ.மு.ச., நிர்வாகிகள் இம்மானுவேல், அரிகிருஷ்ணன், தியாகராஜன், காதர் நவாஸ் தமிழ்மணி, ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜான் பாஷா, சங்கர் மோகன், லட்சுமி வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், தொண்டரணி பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை