உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தார்ச்சாலை பணி எம்.எல்.ஏ., ஆய்வு

 தார்ச்சாலை பணி எம்.எல்.ஏ., ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் கல்லுாரி பகுதிக்கான புதிய தார்சாலை போடும் பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விழுப்புரம், சாலாமேடு 39வது வார்டு பகுதியில், அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லுாரி மாணவர்கள் மற்றும் தந்தை பெரியார் நகர் சுற்றுப்பகுதி குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் மெயின் சாலை சேதமடைந்து நீண்டகாலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது. இதனை சீரமைத்து தர வேண்டும் என கல்லுாரி மாணவிகள் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். அப்போது, உடனடியாக சாலை அமைக்கப்படும் என நகராட்சி தரப்பில் உறுதியளித்தனர். இதனையடுத்து, விழுப்புரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, திருச்சி சாலை சந்திப்பில் இருந்து, கல்லுாரி வரை 2 கி.மீ., தொலைவுக்கு புதிய தார்சாலை போடும் பணி நடந்தது. இப்பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ