மேலும் செய்திகள்
காணையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
23-Jul-2025
விழுப்புரம்:காணை ஒன்றியத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா நடந்தது. காணை மற்றும் கல்பட்டு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கி, திட்டத்தை துவக்கி வைத்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். தி.மு.க., காணை தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா, கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மோகன், ஷர்மிளா முன்னிலை வகித்தனர். அப்போது, ரேஷன் கடை ஊழியர்கள் ஆறுமுகம், இயேசுதாஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி நாராயணசாமி, ஒன்றிய பொருளாளர் மதன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயமாலிணி சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், கிளை செயலாளர்கள் அன்பழகன், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
23-Jul-2025