சாலையோர தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் திக்... திக்...
திண்டிவனம்: திண்டிவனம் - செஞ்சி புறவழிச்சாலையில் சாலையோர தடுப்பு இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் புறவழிச்சாலையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில், திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தில் புறவழிச்சாலை செல்கிறது. இங்கு விவசாய நிலத்தில் செல்லும் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்காக சாலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில், செஞ்சி - திண்டிவனம் மார்க்கத்தில் விபத்தை தடுக்கும் வகையில் 'ரோடு சேப்டி பேரியர்ஸ்' தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் - செஞ்சி மார்க்கத்தில் 'ரோடு சேப்டி பேரியர்ஸ்' அமைக்கப்படவில்லை. இதனால், வாகனங்கள் இப்பகுதியில் சாலையோர மெகா சைஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இப்பகுதியில் அச்சத்துடன் செல் கின்றனர். எனவே, இப்பகுதியில் விபத்தை தடுக்க 'ரோடு சேப்டி பேரியர்ஸ்' அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.