வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு பக்கம் நெகிழி பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்வது. மறுபக்கம் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி பிளாஸ்டிக் நாற்காலிகள் மேசைகள் கொடுக்க வேண்டியது. அட போங்கய்யா பச்சோந்திகளா
திண்டிவனத்தில் நகராட்சி தொடக்க பள்ளி, ரோஷணை (இந்து) கடந்த 1948ம் ஆண்டு துவக்கப்பட்டது. தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் போர்டு, கண்காணிப்பு கேமரா, 'ஏசி' வகுப்பறை, வண்ண மையமான கற்றல் சூழல் என அனைத்து வசதிகளும், இப்பள்ளியில் உள்ளது.மேலும், கடந்த 22-23ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்ற பிறகு, நகர மக்களின் கவனத்தை ஈர்த்தது.இப்பள்ளி மாவட்டம் மட்டுமின்றி மாநில அளவிலும் பிரசித்து பெற்று விளங்க அடித்தளமாக இருந்து வரும், பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன் கூறியதாவது: இந்த பள்ளிக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாறுதலாகி வந்தேன். வரும் போது, ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தனர். பள்ளி கட்டடமும் மிகவும் பழமையாக இருந்தது. நகராட்சி அதிகாரிகளை பல முறை நேரில் அணுகி கோரிக்கை வைத்தின் பேரில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு, கடந்த 21ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.ஒன்றாம் வகுப்பிலிருந்து 5 வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், கடந்த 20-21ம் கல்வியாண்டில், 11 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தற்போது 65ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2022ல் மீண்டும் நகராட்சி கல்வி வளர்ச்சி நிதியை பெற்றதன் மூலம் ஸ்மார்ட் போர்டு, கண்காணிப்பு கேமரா, மின்தடையின்றி மின்சாரம் இயங்கும் வரையில் இன்வெர்ட்டர், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், 'ஏசி'வகுப்பறை, பிரிண்டர், கணிணி, லேப்டாப் என அனைத்து வசதிகளும் கொண்டு வரப்பட்டது.22-23ம் ஆண்டிற்கான விழுப்புரம் மாவட்ட அளவில், சிறந்த பள்ளிக்கான கேடயம், கல்வி அமைச்சர் மகேஷிடமிருந்து பெறப்பட்டது. 2023-24ல், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 12 பெரிய வட்ட மேஜைகள், 50 சிறிய நாற்காலிகள் பெற்று, பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.தொடர்ந்து, 23-24ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி மேலாண்மைக்குழு என்ற சான்றிதழை, அப்போதைய கலெக்டர் பழனியிடமிருந்து பெறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருதுடன், 10 லட்சம் ரூபாய், சான்றிதழ், கல்வி அமைச்சர் மகேஷிடமிருந்து பெறப்பட்டது.இந்த பள்ளிக்கு ஒரே ஆண்டில், பள்ளியின் தலைமையாசிரியர், பள்ளியின் இடை நிலை ஆசிரியை அனீஸ் பாத்திமா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களின் முழு ஒத்துழைப்பு, அயராத பணிகள் காரணமாக மூன்று விருதுகள் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது.மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உதவியுடன், பள்ளிக்கு பெயர் பலகை, சுற்றுச்சுவர் அமைத்தல், சுவர்களில் வண்ண ஓவியங்கள், கற்றல், கற்பித்தல் குறித்து தமிழ், ஆங்கில வாசகங்கள் எழுதப்பட்டது.தற்போது, அனைவரது கூட்டு முயற்சியால், மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிக்கு மேலும் 2 வகுப்பறைகள், சமையலறை கட்டடம் கட்ட நகராட்சி மூலம் 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடந்து வருகிறது. கூடுதல் நிதி கிடைக்க காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு, பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.எங்களுடைய அடுத்த நோக்கம், இந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு தலைமையாசிரியர் வெங்கடேசன் கூறினார்.-தில்ஷாத்பேகம், 6வது வார்டு கவுன்சிலர்.
ஏழ்மை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், இந்த பள்ளி தற்போது அதிக மாணவர்கள் படிப்பதற்கு காரணம், பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேசன், இடை நிலை ஆசிரியர் அனீஸ் பாத்திமா மற்றும் மேலாண்மை குழு முழு ஒத்துழைப்புதான். கோரிக்கை வைத்தவுடன் பள்ளிக்கு கட்டடம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.-அப்சர்பேக், சமூக ஆர்வலர்.
இந்த பள்ளி குறித்து பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் ஒரே ஆண்டில், 3 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டுவிழாவிற்கு எப்போதும் போல் தொடர்ந்து உதவி செய்வேன்.-பரிதாபேகம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி
நகரின் மைய பகுதியில் உள்ள இந்த பள்ளி, தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியை முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி, முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளனர். அனைவரது முயற்சியால், பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பால்பாண்டியன் ரமேஷ்,தொழில் அதிபர்
இப்பள்ளியில் ஆரம்பத்தில் குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை இருந்தது. தற்போது 65 மாணவர்கள் படிக்கின்றனர். அது மட்டுமின்றி பள்ளி ஒரே ஆண்டில் மூன்று விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணம், பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் முழு முயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபடுவதால்தான் பள்ளி மாவட்ட அளவில் சிறந்து விளங்குகிறது.
ஒரு பக்கம் நெகிழி பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்வது. மறுபக்கம் பள்ளி மாணவர்களுக்கு நெகிழி பிளாஸ்டிக் நாற்காலிகள் மேசைகள் கொடுக்க வேண்டியது. அட போங்கய்யா பச்சோந்திகளா