உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் நாகர் பள்ளி மாணவர் சாதனை

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் நாகர் பள்ளி மாணவர் சாதனை

விழுப்புரம்:விழுப்புரம் நாகர் பள்ளி மாணவர், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தில், நாகர் சி.பி.எஸ்.இ., பள்ளி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவர் மகிராஜ், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 500க்கு 489 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் உமா மகேஸ்வரி, முதல்வர் அரசப்பன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர் மகிராஜை, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ